யந்திரம்/ தாயத்து.
யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் என்ன.
யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும்.
ஒரு தகடு எப்படி ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கேள்வி தோன்றும். அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் அதன் விடை இருக்கிறது.
யந்திரம் என்பது பொதுவாக ஒரு மெல்லிய தகடு ஒன்றில் சக்கரம் வரைந்து மந்திர உரூவேற்றபடுவதாகும்.
இதில் தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம் (ஈயம்) போன்ற தகடுகளை பயன்படுத்தப்படும். இது பொதுவாக சதுரங்க வடிவம் கொண்டே தகடுகளை தான் பயன்படுத்தப்படும். இது எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்து இதன் அளவு மாறுபடும். அளவு அதிகமாக சக்திகள் அதிகமாகும்.
இந்த யந்திரம் எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறதே, அந்த காரணத்திற்கான கிரகம், அந்த கிரகத்தின் தேவதை, அந்த கிரகத்தின் அதிதேவதை போன்றவர்களுக்கன குறியீடு, மந்திரம், மூலமந்திரம் அகியவற்றை அந்த தகட்டில் வரைந்து(கிறி) வைக்க வேண்டும். இதில் எழுத பயன்படுத்தும் பொருள்(எழுத்தாணி) மிகமுக்கியமானது. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், பஞ்சலோகம், அஷ்டலோகம் போன்ற ஆணிகளால் தான் எழுத வேண்டும், இரும்பு ஆணியால் எழுத கூடாது. இப்படி எந்த தேவைக்காக செய்கிறாரே அதற்கான சக்கரத்தை வரைந்து (தகட்டில் ஓட்டை கிழிசல் வரக்கூடாது ) பின் அஷ்டகந்தம் பூசபடும் ( 1.புனுகு, 2.கஸ்தூரி, 3.கோரோசனை, 4.குங்குமப்பூ, 5.அத்தர்/ சந்தனம், 6.பச்சை கற்பூரம், 7.ஜவ்வாது, 8.அரகஜா.)
பின் சக்கரததிற்கு வலுவூட்ட மந்திர உரூவேற்றபடும். இதில்தான் ஒரு யந்திரத்தின் முழு சக்தி அடங்கி இருக்கிறது. மந்திர சக்தி ஏற்பட அந்த தகடுகளில் ஐங்காயம் பூச வேண்டும்( வசம்பு, ஓமம், உள்ளி (ஒரு தலை பூண்டு), கடுகு, பெருங்காயம்).
பின் நீா், வெற்றிலை பாக்கு, நைவேத்தியம் படைத்து தூபம் தீபம் கற்றி பின் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். இதில் எத்தனை உரூ ஜெபிக்கின்றோமே அதை பொருத்து அந்த யந்திரத்தின் ஆற்றல் இருக்கும். 9ல் வருகிற எண்ணிக்கையில் 108 முதல் 1000000000008 வரை எண்ணிலடங்கா வரையும் சொல்லலாம்.
முந்தைய பதிவில் கூறியது போல் கோயில்களில் மூலவர் சிலைக்கு கீழ் யந்திரம் இருக்கும் என்று அதுவும் அப்படி முன்னோர்கள் (சித்தர்கள்/ ரிஷிகள்) அந்த குறிப்பிட்ட கோயில் கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆயினாவே அவ்வளவு ஆண்டுகள் அந்த யந்திரத்தை மந்திர உரூ ஏற்றப்பட்ட இருக்கும்.
இதை பூஜை அறையில் வைத்து வணங்கினால் மிக சிறந்த பலன் கிடைக்கும்.
இதையே மிக மெல்லிய தகட்டில் செய்து உருட்டி தங்கம்/ வெள்ளி குழாயில் அடைத்து உடம்பில் படும் படி கட்டி கொண்டால் அதுதான் தாயத்து.
ஆனால் இதை முறையே செய்யாமல் ( உரிய தகடு, ஆணி) பலன்கள் தராது, அதேபோல் முறையே உரூ ஏற்ற வில்லை என்றாலும் பலன் தராது அல்லது சில நாட்கள் மட்டுமே பலன் தரும்( தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பல இப்படி தான் இரும்பு ஆணி( machine) யில் பல லட்சம் செய்து எதாவது ஒரு ஹோமத்தில் வைத்து ஒரு நாள் மட்டும் பூஜை செய்து விற்கும் யந்திரத்தில் ஒரு பயனும் இல்லை.
எந்த காரியத்துக்காக செய்கிறாரே, அதை முறையாக செய்த ஒரு யந்திரத்தை பயன்படுத்தி நிச்சயம் நல்ல சுப பலன்கள் அடையாளம்.
அனைத்து வகை தாயத்து யந்திரங்கள் கிடைக்கும்
நன்மைக்கு மட்டுமே
Read More