பஞ்சலோக மஹா மேரூ (ஸ்ரீ யந்திரம்)
துல்லியமான கணித அளவீடு முறையில் செய்தது…
ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது.
மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம்.
ஸ்ரீ சக்கரம், 43 முக்கோண அமைப்பை கொண்டிருக்கும். யந்திர வழிபாட்டில், ஸ்ரீ சக்கர வழிபாடு முதன்மையானது.
வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, தவறாமல் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு.
சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் நின்று, ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு சாமரம் வீசும் பணி செய்கிறார்கள். நவகிரகங்களும், நட்சத்திரங்களும், ராசிகளும் இவளை வலம்வருவதால், அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்த பலனை அடையலாம்.
நல்ல நாளில் முழுமுதற்கடவுளை வணங்கி, ஸ்ரீ சக்கர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளிலும், விசேஷ நாட்களிலும், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும், பெளர்ணமி, அமாவாசை (முன்னோர் வழிபாடு செய்த பிறகு) நாட்களில் வழிபட வேண்டும். சக்தி கொடுக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வது சகல சக்தியைக் கொடுக்கும்.
Reviews
There are no reviews yet.