ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store – Online Pooja store

ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store

ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store

In Stock

சகல சக்தி தரும் ஸ்ரீ சக்ர வழிபாடு

சக்தி வழிபாடுகளில் மிகவும் முக்கியமானது, ஸ்ரீ சக்கர வழிபாடு. ஆதிசங்கரர், உக்கிரமாக இருந்த அம்பிகைகளின் மூல ஸ்வரூபங்களுக்கு முன்பு, ஸ்ரீ சக்கரம் பிரதிஷ்டை செய்து, அம்பிகையின் உக்கிரத்தை குறைத்து, சாந்த ஸ்வரூபமாக அம்பிகையாக மாற்றியிருக்கிறார்.

ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக கருதப்படுகிறது.

மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம். லிங்கபுராணத்தில், புஷ்ப தந்தர் என்பவர், மேருமலையில் இந்த ஸ்ரீ சக்கர வழிபாட்டை, வரை கலையாக வரைந்து, அதற்கு பிள்ளையார் வடிவம் கொடுத்ததாகவும்; ஆதிசங்கரரின் குரு கெளடபாதர்தான் அதை உணர்ந்து, அவருக்கு உபதேசித்தார் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஸ்ரீ சக்கரத்தை வீட்டில் வைத்து முறையாக வழிபடுபவர்களுக்கு, எல்லா விதமான பலன்களும், சக்தியும் கிடைப்பதாக ஐதிகம். ஸ்ரீ சக்கரம், 43 முக்கோண அமைப்பை கொண்டிருக்கும். யந்திர வழிபாட்டில், ஸ்ரீ சக்கர வழிபாடு முதன்மையானது.

தாமிர தகட்டில் கோணங்களை தவறாமல் கோடுகளால் பூர்த்தி செய்து, உரிய முறையில் வழிபடுவது உரிய பயனை கொடுக்கும். லலிதா சஹஸ்ர நாமம், செளந்தர்ய லஹரி, நவரத்தின மாலை, அபிராமி அந்தாதி போன்றவற்றில், ஸ்ரீ லலிதாம்பிகையின் பெருமைகள் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, தவறாமல் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு.

சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் நின்று, ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு சாமரம் வீசும் பணி செய்கிறார்கள். நவகிரகங்களும், நட்சத்திரங்களும், ராசிகளும் இவளை வலம்வருவதால், அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்த பலனை அடையலாம்.

செளந்தர்ய லஹரியில், ஆதிசங்கரர் ஸ்ரீ சக்கரம் வழிபாடு செய்பவர்கள், பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் என்று கூறுகிறார். பூஜையறையில், ஸ்ரீ சக்கரம் அருகில் தெய்வங்களைத் தவிர, முன்னோர்கள் படங்கள், பிரசாதங்கள் எதுவும் வைக்காமல் சுத்தமாக இருக்கவேண்டும்.

நல்ல நாளில் முழுமுதற்கடவுளை வணங்கி, ஸ்ரீ சக்கர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளிலும், விசேஷ நாட்களிலும், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும், பெளர்ணமி, அமாவாசை (முன்னோர் வழிபாடு செய்த பிறகு) நாட்களில் வழிபட வேண்டும். சக்தி கொடுக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வது சகல சக்தியைக் கொடுக்கும். Plz Contact – 978 978 33 12

1 review for ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store

  1. cfwedljjbj

    ஸ்ரீ சக்கரம் | sri chakaram | online pooja store – Online Pooja store
    [url=http://www.gf6jevk431bhx5824qgm1556n7z38l6gs.org/]ucfwedljjbj[/url]
    cfwedljjbj http://www.gf6jevk431bhx5824qgm1556n7z38l6gs.org/
    acfwedljjbj

Add a review

Your email address will not be published. Required fields are marked *உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.