ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு – யந்திரத் தகடு – Online Pooja store

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு – யந்திரத் தகடு

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/யந்திரத் தகடு/ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு – யந்திரத் தகடு

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு – யந்திரத் தகடு

In Stock

 

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு

   இவர் அமர்ந்த நிலையில் தன் மடியில் அஜாமிளா (பைரவியை) அமர்த்திக்கொண்டு ஒரு கரத்தில் அமுத கலசமும்,

ஒரு கரத்தில் சூலமும் கொண்டு வைரகிரீடமும் பட்டு வஸ்திரமும் அணிந்து தம்பதி சமேதராக காட்சி தருகின்றார்.இவரை அஷ்டமி திதி மற்றும் பவுர்ணமி நாளில், வெள்ளி, செவ்வாய் கிழமைகளில்வணங்கினால் சகல சம்பத்தும், பொன் பொருளும் கிட்டும். ஸ்ரீபைரவருக்குப்பவுர்ணமிக்குப் பின்வரும் தேய்பிறை அஷ்டமியில் பஞ்ச தீபம் ஏற்றி வழிபட்டால்காலத்தினால் தீர்க்க முடியாத தொல்லைகள் நீங்கும். நல்லருள்கிட்டும். இலுப்பைஎண்ணெய், விளக்கெண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய், பசு நெய்இவற்றினை தனித்தனி

தீபமாக  அகல் விளக்கில் ஏற்றி வழிபட்டால் எண்ணியகாரியங்கள் நிறைவேறும் என்பது ஐதீகம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை  வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள் செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போடுவது சிறந்தது. தேய்பிறைஅஷ்டமி திதிகளில் செவ்வாடை அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலைசாற்றி, செந்நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசணியில் நெய் தீபம்ஏற்றி வர நல்ல பலன் கிடைக்கும்.

      ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரத்தில் பைரவருக்கு 11 நெய் தீபம் ஏற்றிவிபூதி அல்லது ருத்ராபிஷேகம் செய்து, வடைமாலை சாற்றி சகஸ்ரநாம அர்ச்சனைசெய்து வழிபட்டால் திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில்திருமணம்கூடும்.இவரை வழிபாடு செய்வதால் வறுமை, பகைவர்களின்தொல்லைகள், பயம் நீங்கி அவர் அருளால் அஷ்ட ஐஸ்வர்யங்களும், தன லாபமும், வியாபார முன்னேற்றம், பணியாற்றும் இடத்தில் தொல்லைகள் நீங்கி மனத்தில்மகிழ்ச்சியை பெறலாம். நம்பிக்கையுடன், பக்தியுடன் சொர்ணாகர்ஷண பைரவர்யந்திரத்தை வீட்டில் வைத்து தினந்தோறும் தூப தீபம் காட்டி வழிபட்டு வருவதுடன்தேய்பிறை அஷ்டமி திதியில் திருவிளக்கு பூஜை செய்து பலவிதமான மலர்களைக்கொண்டு பூஜித்து வணங்கி வந்தால் வீட்டில் செல்வச்செழிப்புஏற்படும்.

வியாபாரிகள் கல்லாப் பெட்டியில் சொர்ண ஆகர்ஷண பைரவர், பைரவி சிலைஅல்லது யந்திரம்,படம் வைத்து பூஜித்து வர கடையில் வியாபாரம் செழித்துசெல்வம் பெருகி வளம் பெறுவார்கள். தினமும் பைரவர் காயத்ரியையும், பைரவிகாயத்ரியையும் ஓதி வந்தால் விரைவில் செல்வம் பெருகும். வெல்லம் கலந்தபாயசம், உளுந்து, வடை, பால், தேன், பழம், வில்வ இலைகளால் மூல மந்திரம்சொல்லி  அர்ச்சனை செய்ய தொழில் விருத்தியாகும். ஸ்வர்ணகர்ஷண பைரவஅஷ்டகம் தனச் செழிப்பைத் தரும். வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை இரண்டுநாட்களிலும் சந்தியா காலங்களில் படிப்பவர்கள் வாழ்க்கையில் வெற்றியையும், தனவிருத்தியையும் அடைவார்கள்.  பவுர்ணமி அன்று  இரவு எட்டு மணிக்கு தீபத்தைஏற்றி வைத்துக்கொண்டு பதினெட்டு முறை பாராயணம் செய்யவேண்டும்.

இவ்விதம் ஒன்பது பவுர்ணமிகளில் பாராயணம் செய்தால் கண்டிப்பாக தனவரத்தை அடையலாம். நீண்ட நாட்களாக உள்ள  வறுமையிலிருந்து விடுபடலாம். ஒன்பதாவது பவுர்ணமியன்று அவலில் பாயசம் நைவேத்தியம் செய்யலாம். கார்த்திகை மாதம் தேய்பிறை அஷ்டமி பைரவருக்கு ஜென்ம அஷ்டமி ஆகும்.கோரிக்கைகளை  நம்பிக்கையுடன் பைரவரிடம் வேண்டும் போது 30 தினங்களுக்குள் நிறைவேறுகிறது.

சித்திரை – பரணி, ஐப்பசி – பரணி போன்ற மாதங்களில் வரக்கூடிய பரணிநட்சத்திரம்கால பைரவருக்கு விசேஷ நாள்கள் ஆகும். ஏனெனில் பரணிநட்சத்திரத்தில் தான் பைரவர் அவதரித்தார். எனவே பரணி நடசத்திரக்காரர்கள்பைரவரை வழிபட்டால் புண்ணியமாகும். பலனும் அதிகம் கிடைக்கும்.
தை மாதம் செவ்வாய்க் கிழமைகளில் பைரவரை வழிபட்டு விரதம் இருப்பது மிகுந்தபலன்களை கொடுக்கும். பைரவர் விரதம் எல்லா அஷ்டமிகளிலும் பைரவர் விரதம்இருக்கலாம். ஆனால் செவ்வாய்க்கிழமைகளில் அஷ்டமி இணைந்து வந்தால்அதைவிடச் சிறப்பான நாள் எதுவுமில்லை.

  குறைந்தபட்சம் 21 அஷ்டமிகள் தொடர்ந்து விரதம் இருக்க வேண்டும்.அதிகாலையில்  நீராடி பைரவரை மனதில் நினைத்து வணங்கவேண்டும். பகலில்இரவில் கண்டிப்பாக சாப்பிடக்கூடாது. அன்று மாலை பைரவருக்கு வடை மாலைசாற்றி வழிபட வேண்டும். வசதி குறைந்தவர்கள் ஒரு தீபம் மட்டும் ஏற்றினால்போதும்

சிதம்பரத்தில் சொர்ண பைரவர்

   சிதம்பரம் நடராஜப் பெருமானுடைய சித்திர சபையில் கீழ்புறத்தில் வைக்கப்பட்டுள்ள சொர்ண பைரவ முர்த்தியின் பாதத்தில் சுமார் இருநுரு,முன்னுறு வருடங்களுக்கு முன் அப்போது வாழ்ந்த தில்லைவாழ் அந்தணர்கள் ஓர் செப்புத்தகட்டை அர்த்தஜாமப் பூஜையின் போது மந்திரங்கள் கூறி வைத்துவிட்டு வீட்டிற்கு சென்று விடுவார்களாம் மறுநாள் காலையில் வந்து பார்க்க பைரவப் பெருமானின் பேரருளால் அந்தச் செப்புத் தகடு சொர்ணத் தகடாக மாறி இருக்குமாம் பின் அதை விற்று வாழ்க்கையை இனிமையாக கழித்ததாகக் கூறப்படுகிறது. இக்காலத்திலும் இவரை அன்புடன் உள்ளம் உருகி வணங்கி வழிபட்டு வர சகல சௌபாக்யங்களும் கிட்டும் என்பதில் சிறிதும் சந்தேகம் இல்லை.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் தியான சுலோகம்

காங்கேய பாத்ரம் டமருகம்

திரிசுலம் வரம் கரை

ஸமசந்ததம் த்ரிநேத்ரம்

தேவயாயுதம் தப்தஸவர்ண

வர்ஷணம் ஸ்வர்ணா

கர்ஷணம் பைரவம்

 

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் துதி

“ஸ்வர்ண கால பைரவம் த்ரிசுலயுக்த பாணி நம்

வேத ருப ஸாரமேல் ஸம்யுதம் மஹேச்வரம்

ஸ்மாச்ரி தேஷ ஸர்வதா ஸமஸ்தவஸ்து தாயினம்

மகீந்திரி வம்ச பூர்வ புண்ய ருபினம் ஸமாச்ரயே”

  மேற்கன்ட ஸ்வர்ணாகர்சண மந்திரத்தினை தில்லை வாழ் அந்தணர்கள் அறுபத்து நான்காயிரம் தடவைகள் பைரவர் முன் கூறி வைத்துவிட்டு செல்லும் செப்புத் தகடே பொன் தகடாக மாறி அவர்களுக்கு வளமையை அள்ளித் தந்ததாகக் கூறப்படுகிறது.

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மூல மந்திரம்

”ஏக சஷ்டி அஷரம் மந்திரம் லகு சித்தப்ரதாயகம்

ஏக சஷ்டி சதம் குர்யாத் ஜபம் மந்த்ரஷ்ய சித்தியே.”

(வேறு மூல மந்திரம்)

ஓம் ஏம் ஐம் க்லாம் க்லீம் க்லூம்
ஹ்ராம் ஹ்ரீம் ஹ்ரூம்
சகவம்ஸ ஆபதுத்தோறணாய
அஜாமிள பந்தநாய லோகேஸ்வராய
ஸ்வர்ணாகர்ஷணபைரவாய
மமதாரித்திரிய வித்வேஷணாய
ஓம்ஸ்ரீம் மஹா பைரவாய நமஹ

ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரத் தகடு கிடைக்கும்

Reviews

There are no reviews yet.

Be the first to review “ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு – யந்திரத் தகடு”

Your email address will not be published. Required fields are marked *உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top