ஆன்மிகத்தில் ஸ்படிகத்தின் முக்கியத்துவம்
ஆன்மிகத்தில் ஸ்படிகம் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. ஸ்படிக விநாயகர், சிவலிங்கம் போன்றவற்றை நமது பூஜை அறையில் வைத்து பூஜிக்கும் போது அபரிதமான ஈர்ப்பு சக்தி ஏற்படும். வாரம் இருமுறையாவது அபிஷேகம் செய்வது நல்ல பலனைத் தரும். முக்தி லிங்கம்- கேதார்நாத், வரலிங்கம்-நீலகண்ட ஷேத்திரம் (நேபாள்), மோட்ச லிங்கம்-சிதம்பரம், போகலிங்கம்-சிருங்கேரி, யோகலிங்கமாக சந்திரமௌலீஸ்வரராக-காஞ்சியில் ஈசன் அருள்பாலிக்கிறார். இவையெல்லாமுமே ஸ்படிக லிங்கங்கள்தான். தினமும் விடியற்காலையில் இதற்கு பூஜைகள் செய்யப்படுகின்றன.
ஸ்படிகத்தில் மிகச் சக்தி வாய்ந்தது, மகா மேரு. இந்த மேரு ஸ்படிகத்தை வாங்கும்போது வெடிப்பு, உடைப்பு இல்லாமல் உள்ளதா என்று சுத்தமாகப் பார்த்த பின் வாங்க வேண்டும். மகா மேருவை வெள்ளி அல்லது தாமிரத் தட்டில் வைத்து பூஜை அறையில் வைக்க வேண்டும். அதற்கும் அபிஷேகம் மிகவும் முக்கியம். ஸ்படிகத்தை யானை வடிவில் வைக்கும்போது லஷ்மி கடாட்சம் வரும். இவ்வளவு அற்புதங்கள் அடங்கிய ஸ்படிகத்தை அனைவரும் உபயோகித்துப் பயன் அடைவீர்கள்.
இவ்வளவு அற்புத மான ஸ்படிகத்தை மற்றவர்களுக்குப் பரிசாகவும் கொடுக்கலாம்.
Reviews
There are no reviews yet.