வெள்ளெருக்கு விநாயகர் | Vellerukku Vinayakar | Shwetark Ganapati | Vellerukku Ver Vinayakar – Online Pooja store

வெள்ளெருக்கு விநாயகர் | Vellerukku Vinayakar | Shwetark Ganapati | Vellerukku Ver Vinayakar

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/வெள்ளெருக்கு விநாயகர் | Vellerukku Vinayakar | Shwetark Ganapati | Vellerukku Ver Vinayakar

வெள்ளெருக்கு விநாயகர் | Vellerukku Vinayakar | Shwetark Ganapati | Vellerukku Ver Vinayakar

In Stock

வெள்ளெருக்கு எருக்கஞ்ச் செடிகள் குடும்பத்தைச் சேர்ந்தது. நீல எருக்கு, ராம எருக்கு என ஒன்பது வகை எருக்கு இருப்பதாக வைத்தியர்கள் கூறுகின்றனர். எருக்கன் செடி 12 வருட காலம் மழை இல்லாவிட்டாலும், அதன் பருவ காலங்களில் பூத்து, காய்த்து, வளர்ந்து வரும் இது சூரியனுடைய மூலிகை சூரிய ஒளியிலுள்ள தண்ணீரை இது நுட்பமாக கிரகித்து வளரக்கூடியது . இந்த விசேஷ அம்சம் உடையதுதான் வெள்ளெருக்கு.இந்த வெள்ளெருக்கு செடியின் இலைதான் பீஷ்மரின் சாபம் கூட நீங்க வழி கொடுத்தது. தான் நினைக்கும் போது இறக்கும் பாக்கியம் கிடைத்தும்கூட துரியோதனனின் பாவசெயலை தடுக்க திராணியின்றி மவுனம் சாதித்த நிலையால் வரம் சாபமாகிறது.அதிலிருந்து விடுபட தன் தந்தையை அழைத்து தன்னை எரிக்க சூரியனை கொண்டு பிழிய சொல்கிறார். அது முடியாது வேண்டுமானால் சூரியனின் ஆற்றலை முழுவதுமாக தன்னுள் ஈர்க்கும் சக்தி படைத்த எருக்கஞ்ச்செடி இலையை கொண்டு தகிக்கலாம் என்று வழி கூறுகிறார்.

அத்தனை சக்தி படைத்தது எருக்கஞ்ச்செடி.இதை வீட்டிலும் வளர்க்கலாம். இதன் பூவை வைத்து விநாயகருக்கும் சிவனுக்கும் அர்ச்சனை செய்யலாம். வெள்ளெருக்கம் பூ சங்கை பஸ்மமாக்க பயன்படுகிறது. வெள்ளெருக்கம் பட்டையை நூலுக்குப் பதில் விளக்கு திரியாக போட்டு எரிக்க சகல பூதங்களும் விலகி ஓடும். வெள்ளெருக்கு வடவேரில் மணிமாலை செய்யலாம். விநாயகர் செய்து வழிபடலாம். ஆகர்ஷணம் எட்டு வகைப்படும். இதில் தன ஆகர்ஷணம் என்னும் பண வரவை கொடுக்கக்கூடியது இந்த வெள்ளெருக்கு விநாயகர்.

இல்லறத்திற்கும், துறவறத்திற்கும் விநாயகர் வழிபாடு சிறந்தது. சைவ உணவு உண்டு வழிபட்டால் பலன் கூடும். விநாயகர் அகவலே ஒரு யோக நிலை விளக்கம்தான். வெள்ளெருக்கு விநாயகர் வழிபாடு அளப்பரிய பலன்களை தருகிறது. இதை அவரவர்கள் அனுபவத்தில் உணர முடியும். சொர்ண கணபதி மந்திரம் சொல்லி,வெள்ளெருக்கு விநாயகரை வழிபட்டால்,தனம் ஆகர்ஷணம் ஆகும்.வெள்ளெருக்கு விநாயகர் என பல இடங்களில் விற்பனை செய்கின்றார்கள். வேர்ப்பகுதிக்குப் பதில் தண்டுப் பகுதியில் விநாயகர் செய்து விற்கின்றாகள் அதனால் அது விரைவில் உளுத்துப்போய் உதிர்ந்து விடுகின்றது.

வெள்ளெருக்கு விநாயகரை வீட்டில் வைத்தால் இல்லம் முழுவதும் வெள்ளெருக்கு கதிர் வீச்சின் மூலம் வெள்ளெருக்கு விநாயகர் மகிமை உணரலாம்.

விநாயகர் அருளை பெறசெவ்வாய் மற்றும் சனிக்கிழமை விநாயகருக்கு மிக உகந்த நாட்கள், அன்று செவ்வரளி, மஞ்சள் அரளி மலர் சாற்றி வணங்கினால் மிக சிறப்பு.
சுக்கில சதுர்த்தி அன்று அருகம்புல் சாற்றி வணங்கினால் வெற்றி நிச்சயம்.

வலம்புரி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியில் வணங்கினால் வெற்றி கிடைக்கும்.

திருமண காலத்தை விரைவில் காண மஞ்சள் விநாயகரை48 நாட்கள் பித்தளை தட்டுக்குள் மூடி வைத்து பூஜை செய்தால் பலன் கிடைக்கும்.

குடும்ப வறுமையை போக்க, முற்றிலும் அகற்ற வெள்ளெருக்கு திரிபோட்டு தீபம் ஏற்ற வேண்டும்.

நவக்கிரக தோசம் நீங்க விநாயகர் பின்புறம் தீபம் ஏற்ற பலன் கிட்டும்.

ஒரிஜினல் வெள்ளெருக்கு விநாயகர் கிடைக்க

Reviews

There are no reviews yet.

Be the first to review “வெள்ளெருக்கு விநாயகர் | Vellerukku Vinayakar | Shwetark Ganapati | Vellerukku Ver Vinayakar”

Your email address will not be published. Required fields are marked *உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top