யந்திரம்/ தாயத்து. – Online Pooja store

யந்திரம்/ தாயத்து.

யந்திரம்/ தாயத்து.

In Stock

யந்திரம்/ தாயத்து.

யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் என்ன.

யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும்.
ஒரு தகடு எப்படி ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கேள்வி தோன்றும். அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் அதன் விடை இருக்கிறது.
யந்திரம் என்பது பொதுவாக ஒரு மெல்லிய தகடு ஒன்றில் சக்கரம் வரைந்து மந்திர உரூவேற்றபடுவதாகும்.
இதில் தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம் (ஈயம்) போன்ற தகடுகளை பயன்படுத்தப்படும். இது பொதுவாக சதுரங்க வடிவம் கொண்டே தகடுகளை தான் பயன்படுத்தப்படும். இது எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்து இதன் அளவு மாறுபடும். அளவு அதிகமாக சக்திகள் அதிகமாகும்.
இந்த யந்திரம் எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறதே, அந்த காரணத்திற்கான கிரகம், அந்த கிரகத்தின் தேவதை, அந்த கிரகத்தின் அதிதேவதை போன்றவர்களுக்கன குறியீடு, மந்திரம், மூலமந்திரம் அகியவற்றை அந்த தகட்டில் வரைந்து(கிறி) வைக்க வேண்டும். இதில் எழுத பயன்படுத்தும் பொருள்(எழுத்தாணி) மிகமுக்கியமானது. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், பஞ்சலோகம், அஷ்டலோகம் போன்ற ஆணிகளால் தான் எழுத வேண்டும், இரும்பு ஆணியால் எழுத கூடாது. இப்படி எந்த தேவைக்காக செய்கிறாரே அதற்கான சக்கரத்தை வரைந்து (தகட்டில் ஓட்டை கிழிசல் வரக்கூடாது ) பின் அஷ்டகந்தம் பூசபடும் ( 1.புனுகு, 2.கஸ்தூரி, 3.கோரோசனை, 4.குங்குமப்பூ, 5.அத்தர்/ சந்தனம், 6.பச்சை கற்பூரம், 7.ஜவ்வாது, 8.அரகஜா.)

பின் சக்கரததிற்கு வலுவூட்ட மந்திர உரூவேற்றபடும். இதில்தான் ஒரு யந்திரத்தின் முழு சக்தி அடங்கி இருக்கிறது. மந்திர சக்தி ஏற்பட அந்த தகடுகளில் ஐங்காயம் பூச வேண்டும்( வசம்பு, ஓமம், உள்ளி (ஒரு தலை பூண்டு), கடுகு, பெருங்காயம்).
பின் நீா், வெற்றிலை பாக்கு, நைவேத்தியம் படைத்து தூபம் தீபம் கற்றி பின் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். இதில் எத்தனை உரூ ஜெபிக்கின்றோமே அதை பொருத்து அந்த யந்திரத்தின் ஆற்றல் இருக்கும். 9ல் வருகிற எண்ணிக்கையில் 108 முதல் 1000000000008 வரை எண்ணிலடங்கா வரையும் சொல்லலாம்.
முந்தைய பதிவில் கூறியது போல் கோயில்களில் மூலவர் சிலைக்கு கீழ் யந்திரம் இருக்கும் என்று அதுவும் அப்படி முன்னோர்கள் (சித்தர்கள்/ ரிஷிகள்) அந்த குறிப்பிட்ட கோயில் கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆயினாவே அவ்வளவு ஆண்டுகள் அந்த யந்திரத்தை மந்திர உரூ ஏற்றப்பட்ட இருக்கும்.
இதை பூஜை அறையில் வைத்து வணங்கினால் மிக சிறந்த பலன் கிடைக்கும்.

இதையே மிக மெல்லிய தகட்டில் செய்து உருட்டி தங்கம்/ வெள்ளி குழாயில் அடைத்து உடம்பில் படும் படி கட்டி கொண்டால் அதுதான் தாயத்து.

ஆனால் இதை முறையே செய்யாமல் ( உரிய தகடு, ஆணி) பலன்கள் தராது, அதேபோல் முறையே உரூ ஏற்ற வில்லை என்றாலும் பலன் தராது அல்லது சில நாட்கள் மட்டுமே பலன் தரும்( தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பல இப்படி தான் இரும்பு ஆணி( machine) யில் பல லட்சம் செய்து எதாவது ஒரு ஹோமத்தில் வைத்து ஒரு நாள் மட்டும் பூஜை செய்து விற்கும் யந்திரத்தில் ஒரு பயனும் இல்லை.

எந்த காரியத்துக்காக செய்கிறாரே, அதை முறையாக செய்த ஒரு யந்திரத்தை பயன்படுத்தி நிச்சயம் நல்ல சுப பலன்கள் அடையாளம்.

அனைத்து வகை தாயத்து யந்திரங்கள் கிடைக்கும்
நன்மைக்கு மட்டுமே


 

யந்திரங்கள் என்று கூறினால் நம்முடைய எண்ணத்தை செயல்படுத்த பயன் படுகின்றது .யந்திரங்கள் பொதுவாக உலோகங்களில் தான் எழுது கிறார்கள்,

அக்காலத்தில் உலோகங்கள் கிடைக்காத பட்சத்தில் அவர்கள்எந்த மரத்திற்கு ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையே கதிர் வீச்சை ஏற்படுத்துகிற சக்தி இருக்கிறது என்று கண்டறிந்து,.

அதில் எது நல்லவை செய்யும் எது தீமைகள் செய்யும் எனது நிறுத்தி வைக்கும் எது வரவழைக்கும் என்று அறிந்து அதற்கான மரங்களை உபயோகப்படுத்தினர் .

அஷ்ட கர்மங்களுக்கான மரங்கள் 

  1. வசியம்  ———- வில்வ பலகை 
  2. உச்சாடனம்——பலாப்ப்லகை
  3. மோகனம் ——–மாம்பலகை 
  4. தம்பனம் ———-ஆலம்பலகை 
  5. ஆகர்சனம் ——-தேவதாரு பலகை 
  6. பேதனம் ———–தில்லை பலகை
  7. வித்வேடனம் —-எட்டி பலகை 
  8. மாரணம் ———–அத்திப்பலகை 

இப்போது அஷ்ட கர்மத்திர்கான உலோகங்கள் 

  1. வசியம்  ———- காரியத்தகடு  
  2. உச்சாடனம்——வெள்ளி தகடு 
  3. மோகனம் ——–தங்க தகடு 
  4. தம்பனம் ———-செம்பு தகடு  
  5. ஆகர்சனம் ——-வெள்ளி தகடு  
  6. பேதனம் ———–இரும்பு தகடு 
  7. வித்வேடனம் —-குருதது ஓலை 
  8. மாரணம் ———–வெள்ளி தகடு 

இப்படியும் யந்திரங்களை பயன் படுத்தலாம் எல்லா விசயங்களுக்கும் செமு வெள்ளி பொதுவானதாக கருதப்படுகிறது ,ஒவ்வொருவரும் தனக்கு தேவையான யந்திரத்தை வரைந்து உருவேற்றலாம் .

பனை ஓலை குருத்து ஊளையாக பார்த்து எடுத்து யந்திரங்கள் வரையலாம் அதற்கும் அதிகமான மின்சார சக்தி உள்ளது நம்முடைய எண்ணங்களை உடனே நிறைவேற்ற கூடியது .

அதுமட்டும் இல்லாமல் சாதாரண பேப்பரில் கூட பச்சை மையுள்ள பேனாவால் எழுதி உருவேற்றி நமது பாக்கெற்றில் வைத்து கொள்ளலாம் 

விபூதியில் யந்திரம் வரையலாம் ,குங்குமத்தில் வரையலாம் சந்தனத்தில்; வரையலாம் .இப்படி யந்திரங்களை அந்தந்த சமயத்தில் எது கையில் கிடைக்கிறதோ அதில் வரைந்து பல காரிய சாதனைகளை நிகழ்த்தி உள்ளார்கள் .

நீரில் மனத்தால் எந்திரம் வரைவார்கள் பாலிலும் வரைவார்கள் .

yantra, mantra, tantra, vasiyam 
யந்திரங்கள் ,

MANTRA ,TANTRA ,VASIYAM, யந்திரங்கள் அதன் வகைகள் ,YANTRA

1 review for யந்திரம்/ தாயத்து.

  1. svvcbepb

    யந்திரம்/ தாயத்து. – Online Pooja store
    [url=http://www.ge574bo9q61fq100a6uror08s56px4o1s.org/]usvvcbepb[/url]
    asvvcbepb
    svvcbepb http://www.ge574bo9q61fq100a6uror08s56px4o1s.org/

Add a review

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top