ருத்திராட்சம் பற்றி அனைவருக்கும் நிறைய விஷயங்கள் தெரியும் நானும் என் பதிவுகளில் நிறைய கூறி இருக்கிறேன் அதனால் இன்று வில்வதை பற்றியும் கருங்காலி பற்றியும் கூறியுள்ளேன்.
வில்வம்:
ஏழு ஜென்ம பாவம் விலக ஒரு வில்வம் போதும்.பல அபூர்வ பலன்களையும் மருத்துவ குணங்களையும் கொண்ட வில்வ மரத்தின் சிறப்பு அளப்பரியது.
மண்ணுலகில் உள்ள ஆன்மாக்களின் பாவங்களைப் போக்கவல்ல ஈசனின் இச்சா, கிரியா, ஞான சக்தி வடிவமாய் ஈசனின் அருளால் பூமியில் தோன்றியது வில்வம். எனவே சிவபெருமானின் தலவிருட்சம் ஆகும் இவ்விருட்சத்தைப் பூசிப்பவர்கள் சகல சித்திகளும் ,நன்மைகளும் அடைவார்கள்.
ஊழிக்காலத்தில் அனைத்தும் அழியும் என உணர்ந்த வேதங்கள் தாங்கள் அழியாதிருக்க என்னவழி என ஈசனிடம் கேட்க ஈசனும் திருவைகாவூர் ( திருகருகாவூர்) திருத்தலத்தில் வில்வ மரத்தின் வடிவில் நின்று தவம் செய்யமாறு அருளினார். அதன்படி வேதங்களும் வில்வமரங்களாகத் தவமியற்றியதால் திருவைகாவூர் என்ற ஊர் வில்வராண்யம் எனச் சிறப்புப் பெயர் பெற்றது.
கருங்காலிக் கட்டை:
ஏவல் ,பில்லி ,சூனியம் அகலும்
கருங்காலி மரம் பயன்கள் :
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது.
இதனால் இதன் நிழலில் அமர்ந்தால் கூட நோய் நீங்கும் வல்லமை கொண்டது..
தேகம் வலுவடைந்து, ஆன்மா பலமடைந்து ஆண்டவனைச் சரணடைய கருங்காலியைத் தொழுவோம்..!
கருங்காலி மரம் மருத்துவ பயன்கள் :
உடலுக்கு வலிவைத்தரும் ரஸாயனமாகும், குரிர்ச்சி தன்மை கொண்டது,
பற்களுக்கு வலிவூட்டும், கசப்பு துவர்ப்பு கலந்த சுவை கொண்டது .
கருங்காலி கட்டை அதிகப் படியான மருத்து தன்மை கொண்டது, இதன் வேர் பட்டை மலர் கோந்து அல்லது பிசின் மருந்து பொருட்களாக பயன் படுத்தப் படுகிறது,
வைரம் பாய்ந்த கட்டை அதாவது மிகவும் பழமையான வயதான மரத்தில் இருந்து கிடைக்கும் பொருட்கள் மிகவும் சக்தி வாய்ந்தது.
கருங்காலிக் கட்டையை தண்ணீரில் ஊறவைத்தால் அந்நீரின் நிறம் மாறும். அந்த நீரைக் கொண்டு குளித்து வந்தால், உடலில் உண்டாகும் அனைத்து வலிகளும்
நீங்கும்.
கருங்காலி மரம் மின் கதிர்வீச்சுகளைத் தன்னுள் சேமிக்கும் தன்மை கொண்டது…!
வீட்டில் கருங்காலி கட்டை வைத்திருந்தால் மிகுந்த நற்பலன்களை அளிக்கும் ..!
Reviews
There are no reviews yet.