ரசமணி :
ரசமணி என்பது சித்தர்களால் உருவாக்கப்பட்டது. ‘ரசம்’ என்றால் பாதரசம். திரவ நிலையை கொண்ட இந்த உலோகம், நம் உடலுக்கு கெடுதலை தரும். ஆனால் சித்த வைத்தியத்தில் தயாரிக்கப்படும் மருந்துகளில் பாதரசம் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. பாதரசத்தை மருந்தாகப் பயன்படுத்தும் போது தீராத நோய்களும் தீரும் என்று சித்தர்களின் வைத்தியத்தில் கூறப்பட்டுள்ளது.
இப்படி சித்த மருத்துவத்தில் பயன்படுத்தப்படும் இந்த பாதரசத்தை கடினமான உலோகமாக மாற்றி, மணியாக செய்து, கயிரில் கோர்த்து கழுத்தில் கட்டிக்கொண்டால் ஏராளமான பயன்கள் உண்டு என்கிறது சித்தர்களின் ரகசிய குறிப்பு. திரவத் தன்மையை கொண்ட பாதரசத்தை அரிய மூலிகைகளுடனும், பாஷானத்துடனும் சேர்த்து கடினமான உலோகமாக மாற்றுவது ரசவாதம் என்று கூறுவார்கள். இப்படி ரசவாதத்தில் மூலமாக செய்யப்பட்ட ரசமணி ஏராளமாக இருக்கிறது. ரசவாதத்தின் மூலமாக உருவாக்கப்பட்ட சிலைதான் பழனியில் உள்ள ‘ஸ்ரீ பால தண்டாயுதபாணி சிலை’. பதினெட்டு சித்தர்களில் ஒருவரான ‘போகர் சித்தர்’ இந்த நவபாஷாண சிலையை ரசவாதத்தின் மூலம் வடிவமைத்து பிரதிஷ்டை செய்தார். இன்றும் அந்த சிலையின் மீது பட்டு வெளிவரும் தீர்த்தத்தை குடித்தால் தீராத நோய்களும் தீர்கின்றது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒரு உண்மை.
ரசமணியின் பயன்கள் சித்தர்களுக்கு:
இரும்பைக் கூட தங்கமாக மாற்றும் சக்தி சித்தர்களின் ரசவாதம் வெறும் வைத்தியத்தோடு மட்டும் நின்று விடவில்லை. ஞானசக்தி, யோகசக்தி இவைகளிலும் சித்தர்கள் சிறந்து விளங்கினார்கள். எந்த ஒரு உலோகமானாலும் அதை தங்கமாக மாற்றும் உலோகமாற்றும் வித்தையை சித்தர்கள் அறிந்திருந்தனர். இந்த வித்தை இதுவரை யாராலும் கண்டுபிடிக்க முடிய இல்லை. இது ஒரு புரியாத புதிராகவே உள்ளது. கலியுகத்தில் இது அறியப்படாமல் இருப்பதே நல்லது. இடம்பெயர்தல் சித்தர்கள் ஓரிடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு இடம்பெயர ரசகுளிகை என்று கூறப்படும் ரசமணியை பயன்படுத்தி வந்தார்கள். முறையான மந்திரங்களை ஓதி, சரியான மூலிகைகளை பயன்படுத்தி உருவாக்கப்படும் இந்த ரசமணியை சித்தர்கள் வைத்திருந்தார்கள். அவர்கள் ஓர் இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்கு இடம் பெயற வேண்டும் என்றால் இந்த ரசமணியை வாயில் போட்டு கொள்வார்கள். இது சித்தர்களுக்கு காற்றில் பறக்கும் சக்தியை கொடுக்கின்றது. இப்படித்தான் போகர் இந்தியாவிலிருந்து சீன தேசத்திற்கு சென்றதாக கோரக்க சித்தர் கூறுகின்றார். இப்படிப்பட்ட மந்திர தந்திரங்களை அறிந்துகொள்ள மனிதர்கள் ஒன்றும் ஞானிகளோ, சித்தர்களோ மகான்களோ அல்ல. பணத்தாசை இல்லாமல், மற்ற ஆசைகளை எல்லாம் துறந்த சித்தர்களுக்குள்ளேயே இந்த வித்தையெல்லாம், சித்தர்கள் மறைவது போலவே, இப்படிப்பட்ட மந்திர, தந்திரங்களும் மறைந்துவிட்டது. ஆனால் மனிதனுக்கு பயன்படும் வகையில், மருத்துவத்தை சித்தர்கள் விட்டுச் சென்றிருக்கின்றார்கள். இந்த ரசமணியால் மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு என்னென்ன பயன்கள் உள்ளது என்பதை பற்றி காண்போம்.
வாதம்
பித்தம் கபம் மனிதனின் உடலுக்கு இந்த மூன்று நிலைகளும் மிகவும் முக்கியமானது. இந்த மூன்றும் சமமாக இருந்தால் மட்டுமே நம் உடல் ஆரோக்கியம் நன்றாக இருக்கும். வாதம் என்பது நம் உடம்பில் உள்ள ஒரு வாயு. இது நம் உடல் வளர்ச்சிக்கு உதவி செய்கிறது. பித்தம் என்பது நம் உடலின் வெப்பநிலையை தருகின்றது. கபம் என்பது நம் உடலுக்கான குளிர்ச்சியைத் தருகின்றது. இந்த மூன்றும் நம் உடம்பில் அதிகரித்தாலும், குறைந்தாலும் நம் ஆரோக்கியம் பாதிப்படைகிறது. வாதம் கூடினாலும், பித்தம் கூடினாலும், கபம் கூடினாலும் நம் உடலில் 1482 வியாதிகள் வந்துவிடும். இந்த வாதம் பித்தம் கபம் சமநிலை படுத்த இந்த ரசமணி உதவி செய்கிறது. ரத்த அழுத்தம் ரத்த அழுத்தத்தால் பாதிக்கப்பட்டவர்கள் இந்த ரசமணியை அணிவதால் ரத்த அழுத்தம் சீராக்கப்பட்டு அவர்களின் உடல்நிலை இயல்புக்கு திரும்பிவிடும். நம் உடலில் உள்ள சோர்வு நீங்கி சுறுசுறுப்பாக செயல்பட இது உதவி செய்கிறது. உடலிலுள்ள ரத்தத்தை சுத்தப்படுத்தவும் இது பயன்படுகிறது. எதிர்மறை சக்திகள் நம் உலகத்தில் எத்தனையோ எதிர்மறை ஆற்றல் கொண்ட சக்திகள் இருந்துதான் வருகின்றது. அவற்றிடம் இருந்து நம்மை பாதுகாத்துக் கொள்ள இந்த ரசமணிகள் பெரிதும் பயன்படுகிறது. மற்றவர்கள் நமக்கு வைக்கும் பில்லி, சூனியம் போன்ற பிரச்சனைகளில் இருந்து நம்மால் விடுபட முடியும். பிரகாசமான முகம் இந்த ரசமணியை அணிந்து கொண்டால் நம் மனதிலுள்ள ஒளியானது தூண்டப்பட்டு நம் முகம் பிரகாசமாக ஜொலிக்க படுகிறது. அதுமட்டுமில்லாமல் நம் அறிவு வளர்ச்சியும், புத்திக் கூர்மையும் அதிகரிக்கப்படுகிறது. நமது வயது முதுமை அடைந்தாலும், நம் உடலை இளமையோடு வைத்திருக்கும் சக்தி இந்த ரசமணிக்கு எப்போதுமே இருக்கிறது. என்றும் நம் தேகம் ஆரோக்கியமாகவும் அழகாகவும் இருக்க இதை அணிந்து கொள்ளலாம்.
இரசமணியின் பலன்கள்:
1.கணவன் மனைவி இடையில் ஏற்படும்,வீண் சண்டைகளை தவித்து குடும்ப ஒற்றுமைக்கு வழிவகுக்கும்.
2.வியாபாரம் மற்றும் தொழில் உயர்வு போன்றவற்றை சிறந்த முறையில் ஏற்ப்படுத்தி தரும்.
3.எந்த ஒரு கெட்ட சக்தியும் பலிக்காது ,ஏவியவரை உடனே தாக்கும். செய்வினை ,ஏவல் ,பில்லி,சூன்யம் போன்ற கெட்ட சக்திகளில் இருந்து பாதுகாக்கவும்,இவற்றின் பாதிப்புகளை அகற்றவும்.
4.எதிரிகள் தொல்லை மற்றும் கடன் தொல்லைகளில் இருந்து விடுபட வைக்கும்.
5.நவ கிரகங்களையும் கட்டுபடுத்தும் பண்பு ரசமணிக்கு உண்டு என்பதால் ,எல்லாவிதமான ஜாதக தடைகளையும் கலைந்து அதிரடியான மாற்றத்தை உணரலாம்..
6.ஜோதிடர் ,எண் கணிதர் ,குறியாடி ,பிரசன்னம் பார்ப்போர் இவர்களின் வாக்கு வன்மையை அதிகரிக்க செய்யும் ,மேலும் காரிய சித்தி ,வாக்கு பலித்தல் எளிதில் கிடைக்கும்.
7.இந்த ரசமணி அணிந்தவர்கள் நினைத்த சகலவிதமான நல்ல காரியங்களும் நடக்கும்.
8.திருமண தடையை நீக்கும்.
9.வேலைவாய்ப்புக்கான தடையை நீக்கி நல்ல வாய்ப்பை உருவாக்கி தரும்
10.இடி,மின்னல்,புயல்,கடல் கொந்தளிப்பு போன்ற இயற்கை அழிவுகளில் இருந்து பாதுகாக்கும்,அணித்து இருப்போரை எதுவும் அண்டாது.
11.ரசமணி அணிந்தால் காரியசித்தி,வாக்கு பலிதம் போன்றவறை எளிதாக அடையலாம்.
12.வாகனங்களில் போகும் போது ஏற்படும் விபத்துகளை தடுக்க வல்லது,நம்முடைய விழுப்புணர்வை அதிகப்படுத்தும்.
13.குழந்தைகளுக்கு ஏற்படும் சகலவிதமான பிரச்சினைகளை வரவிடாமல் பாதுகாப்பு அரண் போல் இருந்து காக்கும்.
மேலே கூறிய தகவல்கள் அனைத்தும் சித்தர்கள் பாடலில் இருந்து (போகர் 7000,700 மற்றும் பிற நூல்கள்) எடுக்கப்பட்டது
ரசமணிகள் உண்மையான ரசமணிகளா என்று பரிசோதிக்கும் சில டிப்ஸ்:
1. ரசமணியை வாங்கி வந்தவுடன் சுத்தமான தண்ணீரில் வைக்கவும்.
2. ஒரு மணி நேரத்திற்குப் பின்பு நாம் தண்ணீரில் போட்ட ரசமணியானது பொன் நிறமாக மாற வேண்டும். நவபாஷாணம் சேர்த்து செய்த ரசமணி பொன் நிறமாக மாறும் தன்மையை கொண்டது.
3. ரசமணி சிறிதளவு பசும்பாலில் போட்டால், அந்த பாலானது 2 நிமிடத்திற்குள் தயிராக மாறி விடும்.
4. அலுமினியத்துடன், ரசமணியை சேர்த்து தேய்த்தால் அலுமினியம் சாம்பல் பஸ்பமாக மாறிவிடும்.
Reviews
There are no reviews yet.