குண்டுமணி வசிய மகிமை
குண்டுமணி வசிய மகிமை ரகசியம்
கிரக சக்திகளை ஈர்க்கும் ஆற்றல் அதிஷ்டரத்தினங்களுக்கு அடுத்தபடியாக மூலிகைகளில்படர்கொடிகளில் இருந்து கிடைக்கும் குண்டுமணிவிதைகளுக்கே உண்டு. தெய்வீக ஆத்மாக்களை வசியம் செய்யும் சக்தி இந்த மூலிகை குண்டுமணிகளுக்கு உண்டு. இந்த குண்டுமணி பலவண்ணங்களில் உண்டு. ஒவ்வொன்றும் ஒவ்வொரு செயலுக்கு ஏற்றதாகும்.
பொதுவாக ஒன்பது வகை வண்ணங்களில் இந்த குண்டு மணிகிடைக்கிறது. 9 கிரகங்களுக்கும் இந்த வகைகுண்டுமணி அதிஷ்ட ரத்தினங்களைப்போல பொருந்தும். ரத்தினங்கள் எளிதான காலத்தில் அதற்கு மாற்றாக இந்த குண்டுமணியையும் பயன் படுத்தியிருக்கின்றனர்.கருப்பு, வெள்ளை, சிவப்பு, பச்சை, மஞ்சள் போன்ற வண்ணங்களிலேயே பெரும்பாலும் பரவலாக குண்டுமணி கிடைக்கிறது. இதில் பச்சை வண்ணகுண்டுமணி அனைத்து தொழில் முறைகளுக்கும் அதிஷ்டத்தை கூட்டித் தருபவை. எனவே உயர்வாககருதப்படுகிறது. நவகிரகத்தில் புதன் அனைத்துகிரகங்களுக்கும் மத்திமமான பலனை தரக்கூடியவர்
இவருக்கு மரகதகல்லில் நிறைந்த கதிர்வீச்சைசெலுத்துவார். அடுத்தபடியாக இந்த பச்சைகுண்டுமணியில் புதனின் கதிர்வீச்சு இருக்கும்.
இந்த குண்டுமணி விதைகள் எடுத்துபாதுகாத்தோமேயானால் பல காலத்திற்கு அழியாமல் இருக்கும். பூச்சிகள் இதை அரிக்காது.சொத்தை விழாது, வெப்பம் குளிர்ச்சி இவைகளைசமமாக தாங்கும் ஆற்றல் இந்த குண்டுமணி விதைகளுக்கு உண்டு. இந்த குண்டுமணியை மாந்திரீக செயல்களுக்கும், வைத்தியத்திற்கும் நிறையவே பயன்படுத்துவார்கள். ஒருவருக்குபலகீனமான கிரகம் இருந்தாலோ, தோஷ கிரகபாதிப்பு இருந்தாலோ அதற்குண்டான குண்டுமணிவிதையை தேர்ந்தெடுத்து தாயத்து குப்பியில் அடைத்து இடுப்பில் கட்டிக்கொள்ளச்சொல்வார்கள். இவ்வாறு செய்வதால் அந்தகுறிப்பிட்ட கிரக தாக்கம் விலகும்.
மாந்திரீக அஷ்டகர்ம செயல்களுக்கு பெரிதும்குண்டுமணி விதையை பயன்படுத்தலாம். அக்காலசித்தர்கள் முதல் இக்காலத்தில் உள்ளவர் வரை குண்டுமணி விதையை பயன்படுத்திக்கொண்டுதான்இருக்கிறார்கள். இதில் சிறு வித்தியாசம் யாதெனில் அன்றைக்கு இதன் பயன்பாட்டை ” சரியானப்படிபயன்படுத்தினார்கள். இன்றைக்கு உள்ளவருககு இதை எப்படி பயன்படுத்துவது என்றே தெரியாமல் இருக்கிறார்கள். இந்த குண்டுமணி பல அதிசய ஆற்றல் சக்திகளை பெற்றதாகும். அதிஷ்டரத்தினக்கற்கள் மின்காந்த சக்திகளை ஈர்க்கும். நாம்அணியும்போது அதன் சக்திகளை நம்மிடம் உள்ளஜீவகாந்த சக்தியோடு உரிய பிரிவில் கலக்க உதவும்.ஆனால் குண்டுமணி விதையில் மின்காந்த சக்தி,ஜீவகாந்த சக்தி, ஆத்மகாந்த சக்தி இவைமூன்றையும் ஈர்த்து தன்னகத்தே சேர்த்து வைக்கும்ஆற்றல் கொண்டதாகும். இதை அணிபவருக்குஇந்த மூன்றுவித அபரிதமான சக்திகளைசம நிலைப்படுத்தி உடலில் செலுத்தும் ஆற்றல்பெற்ற இயற்கை விதைகளாகும். அதனால்தான் இதற்கு இவ்வளவு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
இம்மணிகளை இருவகையில் மட்டுமேபெற்று பயன்படுத்த வேண்டும். முறையான பலன்பெறும் முறையை அறிக :- குண்டுமணி படற்கொடிவகையை சார்ந்ததாகும். சிந்தாமணி, பிரம்மமணிஎன்றும் இதை அழைப்பார்கள். கேட்டதைகொடுக்கும் காமதேனு என்றெல்லாம் புகழ்ந்து கூறியுள்ள நம் முன்னோர்கள் இதை பலன் பெறும்விதத்தையும் கூறிச் சென்றுள்ளார்கள். .
இந்த குண்டுமணிகள் கிரகஆற்றலை பெற்றது என்று அதோடில்லாமல் தெய்வீக சக்திகள் பெற்ற ஆத்மாக்கள் இந்தகுண்டுமணியில் பௌர்ணமி திதி அமாவாசைதிதியில் ஆக்கிரமிப்பு செய்து அருபமானஆத்மாக்கள் குண்டுமணி மூலமாக ரூபமாக மாறிஜீவகாந்த சக்தியை பெற்று ஆனந்தம் கொள்ளும்.இவ்வாறு குண்டுமணியில் உள்ள ஆத்மாக்களை எளிதில் அடையலாம். காணலாம். அவை தனியாகமிளிரும் தன்மையோடு இருக்கும். மின்மினி பூச்சிஇரவில் மின்னும்போது ஒரு ஒளி வருமல்லவாஅதைப்போல தனியாக மின்னும். ஆத்மா அமராதகுண்டு மணிகள் மிளிராது. இந்த மிளிர்தல் மிகநுணுக்கமாக கூர்ந்து கவனித்தால் மட்டுமேதெரியும்.
அனைத்து குண்டுமணிகளும் பலனை பொதுவாகதரும் என நினைப்பது தவறு. தேர்ந்தெடுத்த ஏதாவது ஒரு குண்டுமணியில் மட்டுமே ஆத்மசங்கமம் நிகழும். அதை கண்டுபிடித்து எடுத்துவந்து தாயத்தில் அடைத்து அல்லது பூஜை அறையில் வைத்து பயன்படுத்தினால் பலன்கொடுக்கும். குண்டுமணி கீழே உதிரும் முன்மிளிர் வதையே எடுத்து பயன்படுத்த வேண்டும்.கீழே விழுந்த குண்டுமணியில் மின்காந்தம்இருக்கும் ஆனால் ஜீவகாந்த சக்தி இருக்காது. எனவே கொடியுடன் உதிராமல் இருக்கும் குண்டுமணியை எடுத்துபயன்படுத்தவேண்டும்
Reviews
There are no reviews yet.