*தர்பாசனம்*
இது என்ன புதுவகை ஆசனம் என்று யோசிக்கிறீர்களா? தியானம் செய்ய வெறும் தரையில் அமரக்கூடாது, அப்படி அமர்ந்தால், அவை நம் தியானத்தில் சேமிக்கும் ஆற்றலை, உடலிலிருந்து தரைக்கு கடத்திவிடும். அந்த வகை தியானத்தில் யாதொரு பலனும் இல்லை, எனவேதான், பண்டைக்காலத்தில், தவம் செய்ய பெரியோர்கள், மான் தோல், புலித்தோல் மற்றும் தர்ப்பை புல்லை கொண்டு செய்த தர்பாசனம் பயன்படுத்தினர்.
விலங்குகளின் தோல்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துமாதலால், *தர்பாசனம்* எனும் தர்ப்பை புல்லைகொண்டு செய்த பாயையே, தியானம் செய்ய அமரும் பலகையாக, பயன்படுத்தினர்.
தர்ப்பை புல்லில் ஏராளம் உள்ள தாமிரத்தாதுவின் வளத்தால், தியானங்கள் எளிதில் கைகூடி, எண்ணிய எண்ணங்களை, அபூர்வ திறமைகளை வளர்த்துக் கொள்ள, தர்ப்பையை ஒரு அதிமுக்கிய கருவியாகப் பயன்படுத்தி, வளம் பெற்றனர்.
*தர்ப்பை பாய்*
தர்ப்பை புல்லில் உள்ள தாமிர சக்தியின் ஆற்றலை உடலில் பரவச் செய்ய, இந்த தர்ப்பை பாயை நாமும் வாங்கி, தியானம் செய்யலாம், தியானம் செய்யத் தெரியாவிட்டால், அமைதியாக அமர்ந்து எதிர்கால சிந்தனைகளை, இலட்சியங்களை மனதில் எண்ண அலைகளாக ஓடவிட்டு, அதே சிந்தனையில் வேறு எந்த எண்ணங்களுக்கும் இடந்தராமல் வாய்ப்பு கிடைக்கும்போதெல்லாம் தர்ப்பை பாயில் அமர்ந்து சிந்தித்து வர, எண்ணிய எண்ணமெல்லாம், நலமுடன் விரைவில் நடந்தேற, வாய்ப்புகள் உண்டாகும்.
மேலும், தர்ப்பை பாயில் படுத்து உறங்கிவர, உடல் சூடு குறைந்து, மன உளைச்சல் போன்ற மன வியாதிகள் விலகி, நல்ல நிம்மதியான உறக்கம் உண்டாகும்.
தர்பை பாய்
தேவையெனில்
தொடர்பு கொள்ளவும்
Reviews
There are no reviews yet.