சுத்தமான நாட்டுபசு சாணம் திருநீறு – Online Pooja store

சுத்தமான நாட்டுபசு சாணம் திருநீறு

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/சுத்தமான நாட்டுபசு சாணம் திருநீறு

சுத்தமான நாட்டுபசு சாணம் திருநீறு

In Stock

சிவன் கோவிலுக்கு இந்த ஒரு பொருளை தானமாக வாங்கி கொடுத்தால் ஆயுசுக்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை வாழலாம். தீராத நோய் நொடி பிரச்சனைக்கும் சீக்கிரத்தில் தீர்வு கிடைக்கும்.

ஆன்மீகத்தில் நம் முன்னோர்கள் சொல்லியிருக்கும் சில வழிகளை முறையாக பின்பற்றி வந்தாலே போதும். அது நமக்கு நல்லதொரு வாழ்க்கையை வரமாக கொடுத்துவிடும். முன்னோர்கள் சொன்னது அனைத்துமே மூட நம்பிக்கை என்று, இன்று எல்லா சாஸ்திர சம்பிரதாயங்களையும் கைகழுவி விட்டதால் தான் கஷ்டங்கள் வந்து நம்மை துன்புறுத்திக் கொண்டிருக்கிறது. முன்னோர்களால் நமக்கு சொல்லப்பட்டுள்ள சில ஆன்மீக ரீதியான குறிப்புகளை பற்றித்தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள போகிறோம். நம்பிக்கை உள்ளவர்கள் சாஸ்திர சம்பிரதாயங்களை முறையாக கடைபிடியுங்கள். நல்லதொரு வாழ்க்கையை வாழலாம்

சிவன் கோவிலுக்கு உங்களால் எப்போதெல்லாம் முடிகிறதோ அப்போது சுத்தமான பசுஞ்சாண விபூதியை வாங்கி தானமாக கொடுக்க வேண்டும். இப்படி செய்து வரும் பட்சத்தில் உங்களுக்கும் உங்கள் குடும்பத்திற்கும் நோய்நொடி இல்லாத வாழ்க்கையை பெறமுடியும் என்று சொல்லப்பட்டுள்ளது. குறிப்பாக உங்கள் வீட்டில் உங்களுக்கோ அல்லது உங்கள் குழந்தைகளுக்கு கண் பார்வையில் கோளாறு இருந்தால், அதாவது கிட்டப்பார்வை, தூரப்பார்வை கண்ணாடி போட்டு இருக்கக்கூடிய பிரச்சனை எது இருந்தாலும் அந்த பிரச்சனையை சரியாக வேண்டும் என்று வேண்டிக்கொண்டு உங்களால் எவ்வளவு விபூதியை வாங்கி கொடுக்க முடியுமோ அவ்வளவு விபூதியை வாங்கி சிவன் கோவிலில் இருக்கும் குருக்களிடம் தானமாக கொடுத்து விடுங்கள். அந்த விபூதி கோவிலுக்குப் கொடுக்கப்படும் தானம் என்று சொல்லிக் கொடுத்து விடுங்கள். (ஒரு முறை தான் இந்த தானத்தை செய்ய வேண்டும் என்ற அவசியம் கிடையாது. எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் விபூதியை கோவிலுக்கு தானம் செய்யலாம்.)

இந்த தானத்தை கொடுத்துவிட்டு சிவபெருமானிடம் பிரார்த்தனை செய்து கொள்ளவேண்டும். சிவ பெருமான் சந்நிதியில் அமர்ந்து ‘ஓம் நமசிவாய’ மந்திரத்தை மனமுருகி சொல்லி உங்களுக்கு இருக்கக்கூடிய கண் பிரச்சனை சரியாக வேண்டும் என்று வேண்டிக் கொண்டால் நிச்சயமாக கண் சம்பந்தப்பட்ட பிரச்சினைக்கு நல்லதொரு தீர்வை அந்த எம்பெருமான் காட்டிக் கொடுப்பான்.

அடுத்தபடியாக அரச மரத்திலிருந்து எடுக்கப்பட கூடிய குச்சிகள் யாகங்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும். அந்த குச்சிகளை எடுத்து ஒருபோதும் அடுப்பெரிக்க பயன்படுத்தக்கூடாது. தானாக மரத்திலிருந்து காய்ந்து உதிர்ந்த குச்சிகளாக இருந்தாலும் கூட அதை அடுப்பெரிக்க பயன்படுத்தக்கூடாது. அது பாவத்தை சேர்க்கக்கூடிய செயல்.

நம்முடைய வீட்டில் மங்களகரமான காரியத்திற்கு இரட்டை இழை கோலம் தான் போடவேண்டும். 2 இழை, 4 இழை அப்படிதான் கோலம் போடவேண்டும். துக்கமான அமங்கல காரியத்திற்கு தான் ஒற்றை இழையில் கோலம் போடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பெண்கள் மஞ்சள் நிறப் பூவை தங்களுடைய தலையில் சூடிக் கொள்ளும் போது கிழக்கு பார்த்தவாறு நின்று சூடிக்கொண்டால் வீட்டில் மங்களகரமான காரியங்கள் நடக்கும். வீடு சுபிட்சம் அடையும். அதுவே மஞ்சள் நிறப் பூவை தலையில் சூடிக் கொள்ளும் போது மேற்கு திசை நோக்கி சூடிக் கொண்டால், அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்திற்கும் பண கஷ்டம் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

வெங்கல பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து அந்த தண்ணீரை எப்போதுமே கால்களை கழுவுவதற்கு பயன்படுத்தக்கூடாது. இதன் மூலம் நமக்கு பெரிய பாவம் வந்து சேரும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ள சின்ன சின்ன விஷயங்களை நம்முடைய வாழ்க்கையில் பின்பற்றி வந்தாலே போதும். பெரிய பெரிய நல்ல மாற்றங்கள் ஒன்றன் பின் ஒன்றாக வரிசையாக நமக்கு நடக்க தொடங்கும் என்ற இந்த கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

Reviews

There are no reviews yet.

Be the first to review “சுத்தமான நாட்டுபசு சாணம் திருநீறு”

Your email address will not be published. Required fields are marked *உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top