சாளக்கிராமம் என்பது கருமை நிறத்தில் உள்ள ஒரு புனிதமான கல். இது நேபாளத்தில் முக்திநாத் பகுதியில் உள்ள கண்டகி நதியில் காணப்படுகிறது. இது நத்தைக்கூடு, சங்கு என பல வடிவங்களில் கிடைக்கிறது. இது புனிதமான நதிக்கரையில் கிடைப்பதால் தோஷம் இல்லாதது. யார் வேண்டுமானதும் தொட்டு வழிபடலாம். ஆனால் சுத்தமாக இருக்க வேண்டும்.
இக்கற்களில் இயற்கையாகவே திருமாலின் சங்கு, சக்கரம், கதை, தாமரை போன்ற உருவங்கள் காணப்படுகின்றன. இவை நெடுங்காலமாக கோயில்கள், மடங்கள் மற்றும் வீடுகளில் வைக்கப்பட்டு வழிபடப்படுகின்றன. சாளக்கிராம வடிவங்கள் பல வகைப்படும்.
லட்சுமி நாராயண சாளக்கிராமம், லட்சுமி ஜனார்த்தன சாளக்கிராமம், ரகுநாத சாளக்கிராமம், வாமன சாளக்கிராமம், ஸ்ரீதர சாளக்கிராமம், தாமோதர சாளக்கிராமம், ராஜ ராஜேஸ்வர சாளக்கிராமம், ரணராக சாளக்கிராமம், மதுசூதன சாளக்கிராமம், சுதர்சன சாளக்கிராமம்… இப்படி 68 வகையான சாளக்கிராமங்கள் உள்ளதாக கூறப்படுகிறது.
சாளக்கிராமம் வைத்து வழிபடுகிற வீட்டில் சகல இறைசக்திகளும் அருள்செய்வதாக ஒரு நம்பிக்கை. சாளக்கிராமத்தை இருமுறை வழிபட வேண்டும். சாளக்கிராமம் பூஜை அறையில் வைத்து வழிபட வேண்டியது. அழகுக்காக ஷோ கேஸில் வைக்கக்கூடியது அல்ல. பூஜை அறையில் வைத்து தினமும் பாலாபிஷேகம், ஜலாபிஷேகம் செய்து வழிபட வேண்டும். வலம்புரி சங்கை போல் மிகவும் அரிய பலன்களை தரக்கூடியது இந்த சாளக்கிராமம்.
Reviews
There are no reviews yet.