கோமதி சக்ரா காப்பு | Gomathi Chakra Bracelet – Online Pooja store

கோமதி சக்ரா காப்பு | Gomathi Chakra Bracelet

Home/Malai - Kaappu - Pendant/கோமதி சக்ரா காப்பு | Gomathi Chakra Bracelet

கோமதி சக்ரா காப்பு | Gomathi Chakra Bracelet

In Stock

கோமாதா என்று போற்றப்படும் காமதேனுவின் அம்சம், கோமதி சக்கரத்தில் உள்ளது. எனவே நமது விருப்பங்கள் நிறைவேறக்கூடிய வாய்ப்புகள் தாமாகவே உருவாகும். வலமாக அமைந்த சுழிகள், பசுவின் கண்கள், முதுகு, கால் குளம்புகள், வாலின் மேல் பகுதி, நெற்றி, கழுத்து, அடிவயிறு ஆகிய பகுதிகளில் இருக்கும். காமதேனு என அழைக்கப்படும் பசுவின் சகல சுழிகளும், ஸ்ரீஹரியால் உருவாக்கப்பட்டதால் விசேஷமான அர்த்தம் பெற்றவையாக இருக்கின்றன.

கோமதி சக்கரத்தால் பலன்பெரும் விதம்!
கோமதி யந்திரத்தை சாதாரணமாக கையில் வைத்திருந்தாலே நாம் கோரும் பலன் விரைவில் கிடைக்கும்,

வீட்டின் வாயிலில் 7 கோமதி சக்கரங்களை சிறிய சிகப்பு பட்டு துணியில் கட்டி தொங்கவிட, எதிர்மறை சக்திகள்,கோளாறுகள், அனைத்து திருஷ்டி மற்றும் தீமைகள் விலகி நன்மைகள் பெருகும்.

வீட்டில் பூஜிக்கும் பொழுது 11 கோமதி சக்கரம், 11 மஞ்சள் நிற சோழிகள், குங்குமப்பூ,மஞ்சள் கட்டை, சந்தன கட்டை மற்றும் வெள்ளி நாணயங்கள் வைத்து பூஜிக்க பொருள் வரவு மேம்படும்.

வாஸ்து தோஷம் விலக 11 சக்கரங்களை வீட்டில் வைக்கவோ அல்லது புதைத்து வைக்க வாஸ்து தோஷம் விலகும்.

வியாபாரத்திற்கு ஏழு சக்கரங்களை வைத்து பூஜிக்க செல்வம் பெருகும்.
ஜாதகத்தில் சர்ப்பஅல்லது நாக தோஷமுள்ளவர்களுக்கும் இது பரிஹாரமாக விளங்குகிறது. கோமதி சக்கரத்தை, நாக சக்கர மோதிரமாக செய்து, சர்ப்ப தோஷம் விலக பயன்படுத்துகிறார்கள். அதாவது அதன் சுழியானது பாம்பு தனது உடலை சுற்றி வைத்திருப்பது போன்ற தோற்றத்தில் இருப்பது கவனிக்கத்தக்கது.
ராகு தசையால் பாதிக்கப்பட்டவர்கள் கோமதி சக்கரத்துடன் கோமேதக கல்லையும் சேர்த்து வைத்து வீட்டில் வழிபட்டு வரலாம்.

தங்களது ஜாதகங்களில் கால சர்ப்ப தோஷம் மற்றும் சர்ப்ப தோஷம் இருப்பவர்கள் கோமதி சக்கர வழிபாட்டை செய்து வருவது நல்லது.

கோமதி சக்கரம் நான்கு அளவுகளில் மிகக் குறைந்த எண்ணிக்கையில்  சலுகை விலையில் வழங்குவதற்காக மையத்திற்கு வரப் பெற்றுள்ளன.

சக்தியூட்டப்பட்ட,பூஜிக்கப்பட்ட  கோமதி சக்கரம் வாங்க

(நீங்கள் இருக்கும் இடத்தில் இருந்தே துரித அஞ்சல்-COURIER– மூலம் அனைத்து வாஸ்து பரிகார மற்றும் பூஜைப் பொருட்கள் பெறலாம்)

Reviews

There are no reviews yet.

Be the first to review “கோமதி சக்ரா காப்பு | Gomathi Chakra Bracelet”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.

Back to Top