அஞ்சனக்கல் | நீலாஞ்சனம் | சுருமாக்கல் | கருமாக்கல் – Online Pooja store

அஞ்சனக்கல் | நீலாஞ்சனம் | சுருமாக்கல் | கருமாக்கல்

Home/தெய்வீகபொருட்கள் | DIVINE GOODS/அஞ்சனக்கல் | நீலாஞ்சனம் | சுருமாக்கல் | கருமாக்கல்

அஞ்சனக்கல் | நீலாஞ்சனம் | சுருமாக்கல் | கருமாக்கல்

In Stock

*நெற்றிக்கண்ணைத் திறக்க அஞ்சனப்பிரயோகம்!!!*
************************************************************

அஞ்சனக்கல் என்றால்….!
****************************

போகர் அருளிய “போகர் 12000” என்கிற
நூலில் அஞ்சனக் கல் குறித்த குறிப்புகள்
காணக் கிடைக்கின்றன. வெள்ளையும்,
நீலமும் கலந்த நிறத்தை உடைய இந்த
கல்லுக்கு “நீலாஞ்சனம்”, “கருமாக்கல்” என்ற
வேறு பெயர்களும் உண்டு.

இந்தியாவில் பஞ்சாப், ஆந்திரா மற்றும் தென்
தமிழகப் பகுதியில் இந்த கல் கிடைக்கிறது.
ஒழுங்கற்ற உருவமுடைய இவை இலகுவாக
உடையும் தன்மையுடையது. இவை
தண்ணீரில் கரையாது.
இவற்றில் ஆறு வகை கற்கள் இருப்பதாக
போகர் கூறுகிறார்.

அவையாவன…
சவ்வீராஞ்சனம்
ரசாஞ்சனம்
ரக்தாஞ்சனம்
சுரோதாஞ்சனம்
நீலாஞ்சனம்
புஷ்பாஞ்சனம்

இவற்றில் தற்போது நீலாஞ்சனம் மட்டுமே
நமக்கு இலகுவாக கிடைக்கின்றது. மற்றவை
மிக அரிதாகவே கிடைக்கும். இந்த
அஞ்சனங்களை மருத்துவத்தில்
வெளிப்பூச்சுக்காகப் பயன்படுத்தியதற்க்கான பல ஆதாரங்கள் நூலில் காணக் கிடைக்கின்றன.

சித்த மருத்துவத்தில் குழிப்புண், சன்னி,
மேகம், நாவறட்சி, கண்வலி, இரத்தப் பித்தம்
போன்ற பல நோய்களுக்கு நிவாரணியாகப்
இந்த அஞ்சனக்கல் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இவை தவிர மாந்திரீக, வசிய முறைகளில் மை தயாரிப்புகளுக்குப் பயன்படுத்தியதற்கான ஆதாரங்களும் உள்ளன.

சூரிய வெப்பம் கண்ணை பாதிக்காமல்
இருக்கவும், கண்களைச் சுற்றி கருவளையம்
தோன்றாமல் இருக்கவும், கண்களுக்கு
மேலதிக அழகாய் உண்டு பண்ணவும்
பழந்தமிழ் பெண்கள் இந்த அஞ்சனக் கற்களை அரைத்து புருவத்திலும், இமைகளிலும் மையாக தீட்டிக்கொண்டதற்கான ஆதாரங்கள்
கிடைத்திருக்கின்றன. இன்றைக்கும் இந்த
அஞ்சன மை நாட்டு மருந்துக் கடைகளில்
கிடைக்கிற்து.

அஞ்சனம் நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய முறை (Third Eye Opening)
***********************************************************************

அஞ்சன என்பது கண்களுக்கு தீட்டும் மையே
பார்வதி தேவியை,அஞ்சன மையிடும் அம்பிகே என்றழைப் பதிலிருந்து தெரிந்து கொள்ளலாம்.பெண்கள் மட்டுமே கண்ணில் மையிடுவார்கள் என்பது தவறு.பெண்களும்,
ஆண்களும் கண்ணுக்கு தவறாமல் மையிட்டு வரலாம்.அதன் மூலம் பல நோய்கள் நம் உடலை அணுகா வண்ணம் காத்துக் கொள்ளலாம்.

நீலாஞ்சனம் அல்லது சுருமாக்கல் அல்லது கருமாக்கல் என்றழைக்கப்படும்.
அஞ்சனக்கல் பன்னீர் விட்டு இழைத்து கண்புருவங்கள் ,கண் பட்டை,லலாட மத்தி என்று அழைக்கப்படும் நடு நெற்றியில் பொட்டு வைத்துக் கொள்ள நெற்றிக்கண் எனப்படும் புருவப்பூட்டு 90 நாட்களில் திறக்கும்.

எனது உறவினரும் பலருக்கு ஆன்மீக குருவாகத் திகழும் ஆன்மீகச் செம்மல் அமரர் திரு மிஸ்டிக் செல்வம் அவர்களும் இதைப் பற்றி தமது நூலில் விவரித்துள்ளார்.
முஸ்லீம் அன்பர்கள் ஒவ்வொரு தொழுகையின்போதும் இந்த சுருமாவை கண் பட்டைகளில் போட்டுப் பின் தொழுகை செய்வதை கடமையாகச் சொல்லி இருக்கிறார்கள்.

*நெற்றிக் கண்*
***************

மக்களின் ஆன்மீக நிலை பஞ்சபுதங்களாலும், நட்சத்திரங்களாலும் அடிப்படையில் மாறுபடுவதால் ஒரே வித்தை (பயிற்சி) பலருக்கு பலவிதமான அனுபவத்தைக் கொடுக்கும்.
ஆண்கள் பாதரச அம்சம். பெண்கள் கந்தக அம்சம். பெண்களின் சக்தி மாதம் ஒரு முறை குறைந்து விடுகிறது.
யோக நிலையில் மிக உயர்ந்த நிலையாகக் கருதப் படுவது நெற்றிக் கண் திறப்பது.
நெற்றிக் கண்ணைத் திறக்கப் பல்வேறு உபாயங்கள் மனிதர்களால் செய்யப்பட்டு வருகின்றன.

திபெத் நாட்டில் வாழும் லாமாக்கள் நெற்றியில் ஓட்டை போட்டு குச்சியால் அடைக்கின்றனர். பழங்குடி மக்கள் புருவ மத்தியில் சூடு போடுகின்றனர்.

வைணவர்கள் சுழுமுனை நாடியில் நாமம் தரிக்கின்றனர். சாக்தர்கள் குங்குமம் இடுகின்றனர். பெண்கள் நெற்றி சுட்டி அணிகின்றனர். இஸ்லாமியர் முட்டி முட்டித் தொழுகின்றனர்.

பிராமணர்கள் காயத்ரி மந்திரம் சொல்லி உபநயனம் செய்கின்றனர். யோகிகள் சுழுமுனை மந்திரத்தாலும், பிராணாயாமத்தாலுமல் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.

ரசவாதிகள் ரசமணியால் திறக்கின்றனர். மருத்துவர்கள் கண்ணுப் புழை என்னும் மூலிகையால் திறக்கின்றனர்.

ராஜ குருக்கள் வைரக் கற்களால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.

மந்திரவாதிகள் ருத்திர பஸ்பத்தால் திறக்கின்றனர்.

சைவ மடாதிபதிகள் ஒரு முக ருத்திராட்சத்தால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.

மீனவர்கள் சுறாமீனின் நெற்றிக் கல்லால் நெற்றிக் கண்ணைத் திறக்கின்றனர்.

கிறிஸ்தவர்கள் மெழுகுவர்த்தி ஒளி மூலம் கண்ணைத் திறக்கப் பயிற்சி செய்கின்றனர்.

*நெற்றிக்கண்ணைத் திறக்க ஒரு எளிய பயிற்சி முறை:*
**********************************************************

நாட்டு மருந்துக் கடையில் சுருமாக்கல் அல்லது அஞ்சனக்கல் எனக் கேளுங்கள். 5 கிராமிற்குக் குறையாமல் 10 கிராமிற்கு மிகாமல் ஒரே கல்லாக வாங்கவும். கோணல் மாணலாக இருக்கும். வாங்கிய கல்லை உப்புத் தாளில் தேய்த்துக் கொள்ளவும்.
அதிலுள்ள ஒளிக்கற்றை சூட்சுமமாக வெளிப்படும். தரையில் விரிப்பு விரித்துத் தலையணை வைக்காமல் விளக்குகளை அணைத்து இருளில் படுக்கவும். வடக்கு தவிர இதரப் பக்கம் தலை வைத்து மல்லாந்து படுக்க வேண்டும்.

இரவில் சுமார் 7 மணிக்குப் பால் சிறிது சாப்பிட்டு 10 மணிக்கு மேல் இப்பயிற்சியை ஆரம்பிக்கலாம். அஞ்சனக் கல்லை கண்களை மூடியோ அல்லது மூடாமலோ இரு புருவங்களுக்கு மத்தியில் வைக்கவும். சுருமாக்கல்லில் உள்ள கண்ணுக்குத் தெரியாத தெய்வீக ஒளிக்கற்றைகள் நெற்றிக் கண் ஜவ்வை சிறிது சிறிதாக கிழிக்கும். ஒளி சிறிது சிறிதாக வெளிவரும்.
ஒளி நிலை கூடுதலாகி நெற்றிக்குள் புரண சந்திரன் போல் காட்சி கொடுக்கும். அருள்நிலை பெருகும். 90 நாள் பயிற்சியில் வெற்றி பெறுவீர்கள் .

சங்கரன் கோவிலில் அம்பாளுக்கு மாவிளக்குச் செய்து நெய்யு+ற்றித் தாமரை நுhல் போட்டு மல்லாந்து படுத்து நெற்றியில் வைத்து நோன்பு நோக்கின்றனர். இதுவும் ஒரு முறையாக செய்கின்றனர்.

குண்டலினி யோகப் பயிற்சிக்கு மட்டும் கால வரையறை கிடையாது. மற்ற எல்லா வித்தைகளையும் 90 நாள் தொடர்ச்சியான சாதனையால் முடித்து விடலாம். இந்த காலத்தில் முடிக்க முடியாதவர்கள் மன ஊக்கத்துடன் பயிற்சியைத் தொடரலாம்.

 

Reviews

There are no reviews yet.

Be the first to review “அஞ்சனக்கல் | நீலாஞ்சனம் | சுருமாக்கல் | கருமாக்கல்”

Your email address will not be published. Required fields are marked *











உங்கள் வணிகத்தை உலகறிய செய்கிறோம்.
விளம்பரம் செய்ய +91 978 978 3312.