ஸ்ரீ சக்கரம் Sri chakram Online | Maha Meru | ஸ்ரீ சக்கரத்தை வழிபடுவதால் என்னென்ன பலன்கள் தெரியுமா…!
December 21, 2019
ஸ்ரீ சக்கர மஹாமேரு என்பது சிவசக்தியின் ஒன்பது கட்டு அரண்மனை. ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் மஹா சாம்ராஜ்யம். இந்த சாம்ராஜ்யத்தில் கணபதி, முருகன் முதல் காளி, பைரவர் வரை அனைத்து தெய்வங்களுக்கும் இடம் உண்டு.
ஸ்ரீ சக்கரத்தை வழிபடும் போது அனைத்து தெய்வங்களையும் ஒரே இடத்தில் வழிபாடு செய்யமுடியும். ஸ்ரீ சக்கரத்தில் வீற்றிருக்கும் தேவி ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் பெருமை பேசும் நுல்கள் ஸ்ரீ லலிதா சஹஸ்ரநாமம், சௌந்தர்யலஹரி, தேவி மகாத்மியம், நவரத்தினமாலை, அபிராமி அந்தாதி போன்றவை.
பிரம்மனின் சக்தியான சரஸ்வதியும், விஷ்ணுவின் சக்தியான லக்ஷ்மியும் ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரியின் இரு புறமும் நின்று சாமரம் வீசி பணிவிடை செய்கிறார்கள்.
நவகிரகங்கள், 27 நட்சத்திரங்கள், 12 இராசிகளும், அன்னையை வலம் வருகின்றனர். இவ்வாறாக அனைத்து தெய்வங்களுக்கும் தலைமை பொறுப்பில் வீற்றிருக்கும் மஹா சாம்ராஜ்ய தாயினி அன்னை ஸ்ரீ லலிதா மஹா திரிபுரசுந்தரி அருள்பாலிக்கும் அற்புதமானது ஸ்ரீ சக்ரமஹாமேரு. ஸ்ரீ மஹாமேருவை தரிசனம் செய்தால் அனைத்து தெய்வங்களையும் வழிபட்ட பலன் நமக்கு கிடைக்கும்.
யந்திரம்/தாயத்து yatra thayathu online
November 27, 2019
யந்திரம்/ தாயத்து.
யந்திரம் என்றால் என்ன, அதன் பயன் என்ன.
யந்திரம் என்பது ஒரு தகடு, பிரச்சனையை தீர்க்கும் ஒரு பரிகார முறையாகும்.
ஒரு தகடு எப்படி ஒரு மனிதனின் பிரச்சனையை தீர்க்க முடியும் என்ற கேள்வி தோன்றும். அதை எப்படி செய்கிறார்கள் என்பதில் அதன் விடை இருக்கிறது.
யந்திரம் என்பது பொதுவாக ஒரு மெல்லிய தகடு ஒன்றில் சக்கரம் வரைந்து மந்திர உரூவேற்றபடுவதாகும்.
இதில் தங்கம், வெள்ளி, செம்பு, காரீயம், வெள்ளீயம் (ஈயம்) போன்ற தகடுகளை பயன்படுத்தப்படும். இது பொதுவாக சதுரங்க வடிவம் கொண்டே தகடுகளை தான் பயன்படுத்தப்படும். இது எந்த இடத்தில் பயன்படுத்த வேண்டும் என்பதை பொருத்து இதன் அளவு மாறுபடும். அளவு அதிகமாக சக்திகள் அதிகமாகும்.
இந்த யந்திரம் எந்த காரணத்திற்காக செய்யப்படுகிறதே, அந்த காரணத்திற்கான கிரகம், அந்த கிரகத்தின் தேவதை, அந்த கிரகத்தின் அதிதேவதை போன்றவர்களுக்கன குறியீடு, மந்திரம், மூலமந்திரம் அகியவற்றை அந்த தகட்டில் வரைந்து(கிறி) வைக்க வேண்டும். இதில் எழுத பயன்படுத்தும் பொருள்(எழுத்தாணி) மிகமுக்கியமானது. தங்கம், வெள்ளி, செம்பு, பித்தளை, ஈயம், பஞ்சலோகம், அஷ்டலோகம் போன்ற ஆணிகளால் தான் எழுத வேண்டும், இரும்பு ஆணியால் எழுத கூடாது. இப்படி எந்த தேவைக்காக செய்கிறாரே அதற்கான சக்கரத்தை வரைந்து (தகட்டில் ஓட்டை கிழிசல் வரக்கூடாது ) பின் அஷ்டகந்தம் பூசபடும் ( 1.புனுகு, 2.கஸ்தூரி, 3.கோரோசனை, 4.குங்குமப்பூ, 5.அத்தர்/ சந்தனம், 6.பச்சை கற்பூரம், 7.ஜவ்வாது, 8.அரகஜா.)
பின் சக்கரததிற்கு வலுவூட்ட மந்திர உரூவேற்றபடும். இதில்தான் ஒரு யந்திரத்தின் முழு சக்தி அடங்கி இருக்கிறது. மந்திர சக்தி ஏற்பட அந்த தகடுகளில் ஐங்காயம் பூச வேண்டும்( வசம்பு, ஓமம், உள்ளி (ஒரு தலை பூண்டு), கடுகு, பெருங்காயம்).
பின் நீா், வெற்றிலை பாக்கு, நைவேத்தியம் படைத்து தூபம் தீபம் கற்றி பின் மந்திரங்களை ஜெபிக்க வேண்டும். இதில் எத்தனை உரூ ஜெபிக்கின்றோமே அதை பொருத்து அந்த யந்திரத்தின் ஆற்றல் இருக்கும். 9ல் வருகிற எண்ணிக்கையில் 108 முதல் 1000000000008 வரை எண்ணிலடங்கா வரையும் சொல்லலாம்.
முந்தைய பதிவில் கூறியது போல் கோயில்களில் மூலவர் சிலைக்கு கீழ் யந்திரம் இருக்கும் என்று அதுவும் அப்படி முன்னோர்கள் (சித்தர்கள்/ ரிஷிகள்) அந்த குறிப்பிட்ட கோயில் கட்ட எவ்வளவு ஆண்டுகள் ஆயினாவே அவ்வளவு ஆண்டுகள் அந்த யந்திரத்தை மந்திர உரூ ஏற்றப்பட்ட இருக்கும்.
இதை பூஜை அறையில் வைத்து வணங்கினால் மிக சிறந்த பலன் கிடைக்கும்.
இதையே மிக மெல்லிய தகட்டில் செய்து உருட்டி தங்கம்/ வெள்ளி குழாயில் அடைத்து உடம்பில் படும் படி கட்டி கொண்டால் அதுதான் தாயத்து.
ஆனால் இதை முறையே செய்யாமல் ( உரிய தகடு, ஆணி) பலன்கள் தராது, அதேபோல் முறையே உரூ ஏற்ற வில்லை என்றாலும் பலன் தராது அல்லது சில நாட்கள் மட்டுமே பலன் தரும்( தொலைக்காட்சியில் விளம்பரம் செய்து விற்பனை செய்யும் பல இப்படி தான் இரும்பு ஆணி( machine) யில் பல லட்சம் செய்து எதாவது ஒரு ஹோமத்தில் வைத்து ஒரு நாள் மட்டும் பூஜை செய்து விற்கும் யந்திரத்தில் ஒரு பயனும் இல்லை.
எந்த காரியத்துக்காக செய்கிறாரே, அதை முறையாக செய்த ஒரு யந்திரத்தை பயன்படுத்தி நிச்சயம் நல்ல சுப பலன்கள் அடையாளம்.
அனைத்து வகை தாயத்து யந்திரங்கள் கிடைக்கும்
நன்மைக்கு மட்டும்.தீமைக்கு இடம் இல்லை.
சர்வமங்களம் உண்டாக.
Read More
ஸ்ரீ சக்கரம் Sri chakram | maha meru
November 27, 2019
ஸ்ரீ சக்கரம், 43 முக்கோண அமைப்பை கொண்டிருக்கும். யந்திர வழிபாட்டில், ஸ்ரீ சக்கர வழிபாடு முதன்மையானது. வீட்டில் எப்போதும் மன அமைதி, ஆரோக்யம், நிரந்தர வருமானம், சக்தி போன்றவை நிறைந்திருக்க, தவறாமல் ஸ்ரீ சக்கரத்தை பிரதிஷ்டை செய்து வழிபடலாம். வீட்டில் இருக்கும் வாஸ்து குறைபாட்டையும் போக்கும் வல்லமை இந்த வழிபாட்டுக்கு உண்டு. சரஸ்வதியும், லஷ்மியும் இருபுறமும் நின்று, ஸ்ரீ லலிதாம்பிக்கைக்கு சாமரம் வீசும் பணி செய்கிறார்கள். நவகிரகங்களும், நட்சத்திரங்களும், ராசிகளும் இவளை வலம்வருவதால், அனைத்து தெய்வங்களையும் ஒரு சேர தரிசித்த பலனை அடையலாம். நல்ல நாளில் முழுமுதற்கடவுளை வணங்கி, ஸ்ரீ சக்கர வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும். உங்கள் ஜென்ம நட்சத்திர நாளிலும், விசேஷ நாட்களிலும், செவ்வாய் வெள்ளிக்கிழமைகளிலும், பெளர்ணமி, அமாவாசை (முன்னோர் வழிபாடு செய்த பிறகு) நாட்களில் வழிபட வேண்டும். சக்தி கொடுக்கும் ஸ்ரீ சக்கர வழிபாடு செய்வது சகல சக்தியைக் கொடுக்கும். ஸ்ரீ சக்ர பூர்ண மகா மேரு யாகங்களில் உயர்ந்தது அஸ்வமேதம். தேவர்களில் உயாந்தவர் ஹரி. யானைகளில் உயர்ந்தது ஐராவதம். குதிரைகளில் உயர்ந்தது பஞ்சகல்யாணி. பசுக்களில் உயர்ந்தது காமதேனு. மிருகங்களில் உயர்ந்தது ஸிம்ஹம். பெண்களில் உயர்ந்தவர் ஸீதை. அது போல யந்திரங்களில் உயர்ந்தது சக்ரம் எனப்படும் ;ஸ்ரீ சக்ரபூர்ணமகாமேரு. விநாயகன் உறையுமிடம் ஆனந்தபுரி. முருகன் இருக்கிமிடம் ஸ்கந்தலோகம். ப்ரமன் இருக்குமிடம் ஸத்யலோகம். நாராயணன் இருக்குமிடம் வைகுந்தம.; இந்திரன்இருக்குமிடம் தேவலோகம். சிவபெருமான் இருக்குமிடம் கைலாயம். அது போல அன்னை ஜகன் மாதாஅம்பிகை எம்பெருமானுடன் கூடி இன்புற்று உலகத்து உயிர்கள் உய்யும் பொருட்டு அருள்பாலிக்கும் இடம் ஸ்ரீபுரம் எனக்கூறப்படும் ஸ்ரீசக்ர பூர்ணமகாமேரு பீடம் என்னுமிடமாகும். அன்னையுறையும் இந்த யந்திரத்தை கோடுகளாக வரைந்து வைத்தால் அது ஸ்ரீ சக்ரம் எனவும் அதற்கு வடிவம் கொடுத்தால் அதுவே மகாமேரு எனவும் கூறப்படும.; இவவாலயத்தில் காணப்படுவது அதேபோன்ற மகாமேருவாகும் அன்னை உறையும் இந்த மகாமேரு 9 ஆவரணம் என்னும் கோட்டைகளைக் கொண்டது. அரசர்கள் அரண்மனைகளைச் சுற்றிகோட்டை மதில்களை அமைத்துக் காப்பது போல் தேவியின் ஸ்ரீ சக்ரபுரம் என்னும் கோட்டையைச் சுற்றி 9 கோட்டைகள் உண்டு. ஒவ்வொரு கோட்டையையும் சேனாதிபதிகள் காப்பது போல பெண் சேனாதிபதிகள் காவல் காக்கின்றனர்.ஒவ்வொரு கோட்டையும் ஒவ்வொரு அமைப்பைக் கொண்டது. 1 :முதலில் சதுரக் கோட்டை த்ரைலோக்கிய மோகனசசக்கரம் எனறு பெயர். இதனை ப்ரகடயோகினி முதலான 8 தேவியர் காவல்புரிகின்றனர். 2 : தாமரை இதழ்போன்ற 16 அமைப்புக்கள் கொண்ட பரிபூரக சக்ரம் என்னும் கோட்டை. இதை குப்தயோகின்p முதலான 16 தேவியர் காவல் புரி;கின்றனர். 3 தாமரை இதழ் போன்ற அமைப்பபைக் கொண்ட 8 தளங்களைக் கொண்ட கோட்டை இதற்கு ஸர்வரரேஸம்சேஷரபன சக்ரம் என்ற பெயர். இதனை குப்தரயோகினி முதலான 8 தேவியர் காவல் புரிகின்றனர். 4 14 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வ ஸொபாக்கியதாயக சக்ரம் என்ற பெயரைக் கொண்டது இதனை ஸம்ப்ரதாய யோகினி முதலான 14 தேவதைகள் காவல் புரிகின்றனர். 5. 10 முக்கோணங்களைக் கொண்ட ஸர்வார்த்த ஸாதக சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இதை குலோத்தீரண யோகினி முதலான 10 தேவதைகள் காவல் புரிகின்றனர். 6. 10 முக்கோணங்களைக் கொண்ட சர்வரஷாகர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை நிகர்ப்பயோகினி முதலான பத்து தேவதைகள் காவல் புரிகிpன்றனர். 7. முக்கோணங்களைக் கொண்ட ஸாவரோககர சக்ரம் என்ற பெயரினைக் கொண்டது. இதனை ரஹஸ்ய யோகினி முதலான 8 தேவதைகள் காவல்புரிகின்றனர். 8. ஒரே முக்கோணம் ஸாவஸித்தப் பிரதாயக சக்கரம்என்ற பெயரைக் கொண்டது. இதனை அதிரஹஸ்ய யோகினி முதலான தேவதைகள் காக்கின்றனர். 9. பிந்துஸ்தானம் எனப்படும் ஸர்வானந்தமய சக்கரம் என்ற பெயரைக் கொண்டது. இது ஒரு புள்ளி போன்ற இடமாகும். இதில் பரதேவதையான அம்பிகை ஸ்ரீ லலிதா மகாத்ருபர சுந்தரியாக இருந்து கொண்டு அருள் பாலிக்கின்றாள். லலிதா மஹாத்ருபுர சந்தரியாக இருந்த கொண்டு அருள் பாலிக்கின்றாள். இந்த அமைப்பைக்கொண்டஸ்ரீ சக்ரம் உலகம் உய்யும் பொருட்டு, ஆதிசங்கரரால் பாரத தேசத்தில் காஞ்சி. திருவானைக்கா, மற்றம் திருஓற்றியூர் ;போன்ற தலங்களில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது. மக்களின் துயரைப் போக்கி அன்னையின் அருளை அளிக்கும். ஒரு சிறந்தமார்க்கம் இந்த மஹாமேரு வழிபாடாகும். அன்னையிடம் நாம் செய்யும் அபசாரத்தினால் உண்டாகும் கோபம் தணிய தேவிக்கு இந்த சக்ரஸ்தாபனம் செய்து வழிபட்டால் எல்லா நன்மையும் பெறுவது திண்ணம்ஸ்ரீ சக்கரம் வைத்து வழிபடும் இடங்களில், லஷ்மி குடியிருப்பாள் என்பது ஐதீகம். இந்த ஸ்ரீ சக்கர வழிபாடு, சக்தி வழிபாட்டில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக உள்ளது. மகாமேருவின் சமப்படுத்தப்பட்ட வடிவமே ஸ்ரீ சக்கரம்.